ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு எச்சரிக்கை

<!–

ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு எச்சரிக்கை – Athavan News

ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை மறு அறிவித்தல் வரை பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

தனியாருக்கு சொந்தமான பேருந்துகள் பயணிக்கும் அளவு ஒப்பீட்டளவில் குறைவாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிடார்.

பெருந்தொற்று நிலைமையினால் வேறு தொழில்களை நாடிச்சென்றுள்ள பஸ் சாரதிகள் மீண்டும் தொழிலுக்கு திரும்பாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Leave a Reply