மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில், கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இன்று அதிகாலை மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது, நான்கு பரல்களில் கசிப்பு காய்ச்சுவதற்;காக வைக்கப்பட்டிருந்த 08 இலட்சத்து 40 மில்லி லீற்றர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டமையுடன் 01 இலட்சத்து 65 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்திவந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளமையுடன் கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய தோணியொன்றும் மீட்கப்பட்டது.
இயந்திரப்படகு மூலம் சென்று முறக்கொட்டாஞ்சேனை ஆற்றுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த பாரியளவில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டுள்ளர்.
இதேபோன்று, அப்பகுதியில் 15 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு கொண்டுசென்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.


