கிளிநொச்சியில் கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டம்!

கிளிநொச்சி ஊடக மையத்தால் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தின் முதல் கட்ட பணி இன்று நிறைவு பெற்றது.

கடந்த மாதம் 4 ஆம் திகதி ‘பாதுகாப்பாக இருங்கள்’ எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி ஊடக மையத்தால் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா ஒழிப்பு முதல் கட்ட வேலைத்திட்டம் 30 ஆவது நாளான இன்று நிறைவு பெற்றது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் யாசகர்கள், வீதிகளில் கைவிடப்பட்டவர்களிற்கு, பகல் மற்றும் இரவு உணவுகள் ஊடகவியலாளர்களால் வழங்கப்பட்டது.

இதற்கு புலம்பெயர் உறவுகள், கிளிநொச்சி வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளது.

அத்துடன், ஆடைகள், முக கவசங்கள், தொற்று நீக்கி திரவங்கள் என்பனவும் கற்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார், பொதுமக்களிற்கும் வழங்கப்பட்டுள்ளன.

30 ஆவது நாளான இன்று ஊடகவியலாளர்களின் நிதிப் பங்களிப்புடன் மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டமையுடன், தென்னிந்திய திருச்சபையின் உதவியுடன் ஆடை, நுளம்புவலை, பாய், துவாய் ஆகியனவும் வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply