வயோதிபரொருவர் உயிரிழப்பு! – இராணுவ அதிகாரி உட்பட மூவர் கைது

பதுளை, அசேலபுர பிரதேசத்தில் வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்ட நபருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களால் குறித்த நபரின் வீட்டிற்கு கல் வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply