குடும்பத்தகராறில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, காத்தான்குடியில் குடும்பத்தகராரில் ஏற்பட்ட கைகலப்பில் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

புதிய காத்தான்குடி 2 கப்பல் ஆலிம் வீதியில் வசித்து வந்த 28 வயதுடைய முகம்மது முஸ்பீர் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது மனைவிக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

பின்னர், மனைவியின் சகோதரனுக்கும் இவருக்கும் இடையில் தகராறு இடம்பெற்று, மச்சினன் இவரை தாக்கியுள்ளார். இதனால், காயமடைந்த இவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

இதுதொடர்பில், இவரின் மனைவியின் சகோதரனை காத்தான்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த நபர் போதைவஸ்து பாவனைக்கு அடிமையானவர் எனவும், இதனாலேயே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply