மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்

நாட்டில் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த முடியாதென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

மேலும் தேர்தலை விரைவாக நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் வெளியிட்ட அறிக்கைக் குறித்து தம்புள்ளையில் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தேவையாயின் எதிர்க்கட்சி தலைவர், அவருக்கென்று தனியாக ஒரு தேர்தலை நடத்திக்கொள்ளட்டுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply