யாழில் பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் சுகயீனம் காரணமாக மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும், மண்டான், கரணவாய் தெற்கைச் சேர்ந்த 16 வயதுடைய கணேசன் கிருசிகன் என்பவராவார்.

உடல் நலக் குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பில், நேற்று கரவெட்டி மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மாணவன் உயிரிழந்தார் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply