வலி.கிழக்கு பிரதேச சபையின் ஈபிடிபி உறுப்பினர் கடமைக்கு இடையூறு விளைவித்தமையால் பொலிஸார் வானத்தை நோக்கி சூடு நடத்தி எச்சரித்துள்ளனர்.
இச் சம்பவம் ஊரெழு பகுதியில் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஊரெழு பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர்.
அவர்களை, வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி தண்டனைப் பத்திரம் எழுத முற்பட்ட போது, அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளார்.
மேலும், அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றதால் பொலிஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர், தன்னை ஈபிடிபி கட்சி என அறிமுகப்படுத்தி பல தடவைகள் பொலிஸாருடன் முரண்பட்டு கடமைக்கு இடையூறு விளைவிப்பவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


