
மஸ்பெலியா,ஜுன் 12
மஸ்கெலியா, பிரவுன்லோ பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற சிறுவன் மரத்திலிருந்து வலுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




