
முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில்,தற்போது குழப்ப மேலும் தீவரமடைந்துள்ளது.
இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுவரும் குருந்தாசோக புராதன விகாரையில், கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் இன்று காலை ஒன்பது மணிக்கு நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும் இராணுவம் காவல்துறை, விமானப்படை, கடற்படையினரின் பங்கேற்புடனும் நிகழ்விருந்தது.
இந்த நிலையில் பொது மக்கள் ,சிவில் அமைப்புகள்,மற்றும் அரசியல் பிரமுகர்களின் எதிர்ப்பால் இதுவரை புத்தர் சிலை வைக்கப்படவில்லை.எனினும் குறித்த பிரதேசத்தின் அடிபாகத்தில் பிக்குகள் தற்போது குவிந்துள்ளனர்.மேலும் பல வாகனங்களில் பிக்குகள் குறித்த இடத்துக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.இதனால் குறித்த பகுதியில் குழப்ப நிலை தொடர்கிறது.
பிற செய்திகள்

