மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது – முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை!

மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு; இன்று கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *