
அமெரிக்காவிடம் இருந்து மேலும் 3 லட்சத்து 4 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தால் அமெரிக்காவிடம் கோரப்பட்ட 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகளில் முதற்கட்ட தடுப்பூசி இவ்வாறு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி கட்டார் டோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
இதேவேளை இவ்வாறு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் மத்திய களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல் தெரிவிக்கின்றன.
இதேவேளை, எதிர்வரும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசிகள் பெருமளவில் நாட்டிற்கு பெறப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்க்கட்சிகளின் தவறான தகவல்களை காரணமாகவே இளைஞர்கள் தடுப்பூசி செலுத்த தயங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

