
ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு பயணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) காலை அவர், EK-650 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22 அன்று நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி ராஜபக்ஷ உரையாற்றினார்.
பின்னர் பொருளாதாரம், கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் குறித்து பல நாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.
மேலும் வொஷிங்டன் மற்றும் நியூயோர்க்கில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் 20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமெரிக்காவில் மன்ஹாட்டன் நினைவிடம் முன்பு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நினைவேந்தல் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

