இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மூன்றுடன் ஐந்து பேர்; கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில், ஓட்டோ ஒன்றை வழிமறித்து சோதனையிட்ட பொலிஸார் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கைப்பற்றியுள்ளமையுடன் நால்வரை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள், துப்பாக்கி, தோட்டாக்களை விலைக்கு வாங்கியுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, துப்பாக்கி, தோட்டாக்களை விற்பனை செய்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கஹவத்த, அட்டகலன்பன்ன ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21, 30, 65, 39, 49 வயதுடைய ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட ஐவரையும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரியவருகின்றது.


