விவசாய மக்களுக்காக நீதிமன்றம் சென்று நான் நீதியை பெற்றுக் கொடுப்பேன்! சஜித்

அரசின் பொறுப்பற்ற முடிவுகளால் நெல் விவசாயி உட்பட ஒட்டுமொத்த விவசாய சமூகமும் மிகவும் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நெல் சாகுபடிக்கு தேவையான உரத்திற்கு பதிலாக, மற்ற பயிர் வகைகளுக்கு பயன்படுத்தப்படும் உரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசின் பொறுப்பற்ற முடிவுகளுக்கு விவசாயிகள் தங்கள் உயிரை கொடுக்க வேண்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அத்தகைய இழப்பீடு வழங்கப்படாவிட்டால், அவர்களுடன் சேர்ந்து நீதிமன்றத்தின் முன் சென்று நீதிக்காக குரல் கொடுப்பேன் அவர் தெரிவித்துள்ளார்

ஹம்பாந்தோட்டை லுனுகம்வெஹெராவில் உள்ள அக்போபுர பகுதியில் உள்ள விவசாயிகளைச் நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

Leave a Reply