வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை திருடிய நபர் கைது!

வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடிய சந்தேக நபர் மிரிஹான சிகேரா வீதி பகுதியில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதோடு சந்தேக நபரிடம் இருந்து ஐந்து கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது பல தங்க ஆபரணங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

மிரிஹான தலங்கம பகுதியில் பல வீடுகளுக்குள் புகுந்து பல பொருட்களை திருடியது தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply