திருகோணமலையில் உள்ள எண்ணெய் தொட்டிகளை இந்தியாவுக்குக் கொடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை!

திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் தொட்டி வளாகத்தை நீண்ட கால அடிப்படையில் இந்திய நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்போவதாக வெளியான செய்தி குறித்து வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தன்னிச்சையாக செயல்படும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் இந்த திட்டம் தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இந்திய நிறுவனத்திடம் இந்த எண்ணெய் தொட்டி வளாகத்தை ஒப்படைக்கத் தயாராகி வருவதாக பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும், உண்மை நிலை தெரியாமல் இவ்வாறன குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தவறு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply