முறைப்பாடு தெரிவிக்க வந்த மக்களை ‘பொலிஸில் பிடித்து கொடுத்து விடுவேன்’ என மிரட்டிய பொறியியளாலர்

கடந்த சில தினங்களாக மன்னார் நகர்பகுதியில் நிலவி வரும் சீரற்ற கால நிலைகாரணமாக தொடர்சியாக மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் அண்மையில் சாந்திபுரம் பகுதியில் மன்னார் நகர சபைக்கு சொந்தமான வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் காபட் வீதிகளாக மாற்றப்பட்ட நிலையில் வீதிகளில் ஒழுங்கான வடிகால் அமைப்போ, கல்வெட்டுக்களோ , நீர் வழிந்தோடக்கூடிய ஏற்பாடுகளோ மேற்கொள்ளாது வீதி அமைத்துள்ளனர்.

இதன் காரணமாக மழை நீர் வலிந்து கடலுடன் கலக்க முடியாத நிலையில் மக்களின் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக நகர சபை தலைவர் மற்றும் செயளாலருக்கு தெரியப்படுத்திய நிலையில் ஒழுங்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாத காரணத்தினால், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முககவசங்கள் அணிந்து முறையிட சென்று உள்ளனர்.

எனினும், குறித்த நிறுவனத்தின் பணி புரியும் பொறியளாலர் பாதிக்கப்பட மக்களை மரியாதை குறைவாக நடாத்தியதுடன் அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறும் பணித்துள்ளார்.

அத்துடன் தற்போது எந்த வீதி செயற்பாடுகளும் செய்ய முடியாது எனவும் இதற்கு மேல் இங்கு நின்றால் பொலிஸில் பிடித்து கொடுத்து விடுவேன் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட மக்கள் மன்னார் நகர பிரதேச செயலாளரிடம் குறித்த விடயம் தொடர்பாக நேரடியாக முறையிட்டதை தொடர்ந்து நீர் வழிந்தோடக்கூடிய தற்காலிக ஏற்பாடுகளை மேற்கொண்டு தருவதாக தெரிவித்துள்ளார்

அத்துடன் மக்கள் பிரச்சினையை உரிய முறையில் தீர்க்காது மக்களை அவமரியாதைக்கு உட்படுத்திய மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியளாலர் மீது மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply