நீதி வேண்டி 218 நாளாக இடம்பெறும் போராட்டம்!

யாழ்.வடமாகாண செயலாளர் அலுவலகத்திற்கு முன்னால் 218 நாளாக, சுகாதர பணி உதவியாளர்கள் அடையாள போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வடமாகாண சுகாதர பணி உதவியாளர்கள் இன்று திங்கட்கிழமை, தமக்கு கிடைக்கப்பெற்ற நியமன கடிதத்திற்கு பதில் வழங்குமாறு, 218 நாளாகவும் போராட்டம் ஒன்றை முன்னடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில்,

கிடைக்கப்பெற்ற நியமனங்களுக்கு பதில் என்ன?, ஜனாதிபதியின் பதிப்புரையை நிறைவேற்றுங்கள்!, நியமனம் கிடைக்கப்பெற்ற எங்களை பணிக்கு அமர்த்துங்கள்..! மூன்று முறை நேர்முகத் தேர்வு வைத்தும் எங்களுக்கு பதில் என்ன? இவ்வாறான பதாதைகளை தாங்கி, போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், தங்களுக்கு வந்த நியமனத்துக்கு ஒரு நியாயம் கிடைக்கும் வகையில் தாங்கள் இந்த போராட்டத்தை செய்து வருவதாகவும், நாளை அல்லது நாளை மறுதினம் சகல அமைப்புகளையும் ஒன்றிணைத்து ஒரு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அந்த நியமனத்தை வலியுறுத்தி தங்களுக்கு ஒரு நல்ல தீர்வை தருமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply