ஆயுர்வேத வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

தியத்தலாவையில் உள்ள ஆயுர்வேத பொது வைத்தியசாலையின் சுகாதாரப் பிரிவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதார பிரிவினருக்கு கொரோனா நிவாரண கொடுப்பனவாக 7,500 ரூபாயை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் கொடுப்பனவை ஆயுர்வேத திணைக்களத்தின் சுகாதார அலுவலகப் பிரிவினருக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வைத்தியர்கள் தவிர வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் ஒரு மணித்தியாலம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தியத்தலாவ ஆயுர்வேத பொது வைத்தியசாலையானது தற்போது கொரோனா மருத்துவமனையாக செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், அதனால் அவர்களும் இந்த உதவித்தொகைக்கு தகுதியுடையவர்கள் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply