திருகோணமலையில் ஹெரோயினுடன் நால்வர் கைது!

திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1,615 மில்லி கிராம் ஹெரொயின் போதைப் பொருளுடன் நால்வரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 32, 43, 22 மற்றும் 26 வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு ஹெரொயின் போதைப் பொருளை கொண்டு சென்றபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக அக்போபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஜி.பி.டகம்பத் தெரிவித்தார்.

Leave a Reply