வவுனியா, கோவில்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, கோவிற்குளம் 9 ஆம் ஒழுங்கையில் வீதியில் இளைஞர் குழு நேற்று அவ்வீதியூடாக செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரியினால் தாக்கியமையுடன் அவர்களின் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், சில வீடுகளுக்குள் புகுந்தும் வீட்டிலிலுள்ளவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இத் தாக்குதலில் நால்வர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிசீரீவி மற்றும் மக்களின் நேரடி வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


