இந்தியாவில் 91 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

இந்தியாவில் 91 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் இதுவரை 70 விழுக்காடு மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 71 இலட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

இதன்படி 91 கோடியே 41 இலட்சம் டோஸ்கள்  இதுவரை செலுத்தப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply