இளைஞர், யுவதிகள் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது அத்தியவசியமானது என சகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஹேமாந்த ஹேரத் தெரிவித்துள்ளனர்.
மேலும், சமூகத்தில் கூடுதலாக செயலில் உள்ளவர்கள் இளைஞர் யுவதிகள். கல்வி, தொழில் என இவர்கள் அனைத்திலும் ஈடுபட்டுகின்றனர். ஆகவே, இளைஞர் யுவதிகள் முதலில் உங்களின் பாதுகாப்பில் கவனம் எடுக்க வேண்டும்.
இதற்காக தடுப்பூசி போடுவது கட்டாயமாகும். தடுப்பூசி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, வைரஸ் அபாயத்தை ஓரளவு குறைக்கிறது. மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயத்தையும் குறைக்கிறது.
எனவே, இந்தத் தடுப்பூசியை அனைவரும் விரைவில் பெற வேண்டியது அவசியம்.
தற்போது இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகின்ற போதிலும், நாட்டின் மக்கள் தடுப்பூசி போட்டால் மட்டுமே ஒட்டுமொத்த இறப்புகளின் எண்ணிக்கையில் பெரிய குறைப்பை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.