ரிஷாட்டைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

<!–

ரிஷாட்டைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு! – Athavan News

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிக்கு நிதியுதவி வழங்கியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply