பருத்தித்துறை நீதிபதியை அவமதித்த மூவர் கைது!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்து, வார்த்தைப் பிரோயகம் செய்த மூன்று பேர் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இணுவில், வவுனியா மற்றும் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 31, 33, 36 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டனர்.

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி காரில் சென்ற வேளை, முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர், நீதிபதியை அவமதிக்கும் வகையில் கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு அருகில் வீதித் தடையில் கடமையிலிருந்த பொலிஸார் மூவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், மூவரும் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் முச்சக்கர வண்டியும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply