நாடாளுமன்ற அமர்வு இன்று சபாநாயகர் மகிந்த யாப்ப அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
11.00 மணி வரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 11.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.
இதன் பின்னர் மாலை 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், 4.50 மணி முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறவுள்ளது.
இதன்போது, பால் மா, எரிவாயு மற்றும் சீமேந்து உட்பட பல அத்தியாவசிய பொருள்களின் விலைகள் மற்றும் அரிசி விலையை கட்டுப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.


