6 பிள்ளைகளின் தந்தை மின்னல் தாக்கி பலி

திருக்கோயில் – சாகாமம் பகுதியில் நேற்று (04) மாலை மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாகாமத்தை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், தனது மகனின் வயலில் வரம்பு கட்டிக் கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Leave a Reply