பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சுகாதார வழிகாட்டுதல்கள் புறக்கணிக்கப்பட்டால் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் மிகவும் கவனமாகச் செயற்படாவிட்டால், நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும். நாடு முழுவதும் 15 ஆம் திகதி திறக்க முடியுமா என்று உறுதியாக சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, சுகாதார வழிகாட்டுதல்களை சரியான முறையில் பின்பற்றுமாறு மக்களைக் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.


