மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றின் வர்ணங்கள் மற்றும் இலக்கத்தகடுகளை மாற்றம் செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெல்லவாய, நுகயாய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27, 54 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், வௌ;வேறு பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றின் வர்ணங்கள் மற்றும் இலக்கத்தடுகளை மாற்றம் செய்து அவற்றை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவ்வாறு திருடப்பட்டு வர்ணங்கள், இலக்கத்தகடுகள் மாற்றப்பட்ட ஐந்து மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நீண்டகாலமாக இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


