காதல் விவகாரம்: இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை!

கேகாலை மாவட்டம், ரூவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெருஹேன பிரதேசத்தில் காதல் விவகாரத்தால் இளைஞர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வஹரக பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், இதில் தொடர்புடையவரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெத்து வருகின்றனர்.

Leave a Reply