கோர விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் பலி!

கொழும்பு, கஹதுடுவ, ரிலாவல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ரிலாவல பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

நாரஹேன்பிட்ட தனியார் வைத்தியசாலைக்கு சுகாதார ஊழியர்களை அழைத்துச் சென்ற பேருந்து ஒன்றில், வயோதிபப் பெண் ஒருவர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்து, அங்கு இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகி இருந்தது.

இதுதொடர்பில், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply