குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.
ஹப்புத்தளை, பிட்டரத்மலை பகுதியைச் சேர்ந்த 49 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் உயிரிழந்துள்ள இப் பெண்ணுக்கு கொரோளாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலை நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
ஹப்புத்தளை, தொட்டலாகலை பகுதியில் கடந்த 29 ஆம் திகதி தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய 14 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியிருந்த நிலையில், அதில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார் எனத் தெரிய வருகின்றது.


