ஜனாதிபதி – ஷ்ரிங்லா சந்தித்துப் பேச்சு வார்த்தை

இலங்கைக்கு வந்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பு, இன்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

மேலும், கொழும்பு,கண்டி,திருகோணமலை,மற்றும் யாழ்ப்பாணத்தில் முக்கியத்துவம்மிக்க சந்திப்புக்கள்,நிகழ்வுகளில் பங்கேற்று தனது ஆக்கபூர்வமான 3 நாள்விஜயத்தினை வெளியுறவுச்செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நிறைவுசெய்துள்ளார்.

இதேவேளை, அவரதுவிஜயம் இந்திய இலங்கை உறவுகளுக்கு மேலும் உத்வேகத்தையும் தூண்டுதலையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply