இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், சிப்பாய்களின் பங்கேற்புடன், கிரிவெஹெர மற்றும் கதிர்காமம் ஆகிய ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இராணுவ படையணிகள், பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், படைப்பிரிவுகள், பிரிகேட்கள், பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றின் இராணுவக் கொடிகளானது, ஆசிர்வாதத்துக்காக மூன்றுமுறை கிரிவெஹெர தூபியை சுற்றி எடுத்துச் செல்லப்பட்டமையோடு அவை விசேட மேடையில் வைக்கப்பட்டன.
இதனையடுத்து, புனித தூபியை சுற்றிலும் கொடி சாத்தும் நிகழ்வு இடம்பெற்றமையுடன், சகலரும் எண்ணெய் தீபங்களை ஏற்றியமையைத் தொடர்ந்து, கிலன்பச பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், கிரிவெஹெரவின் தலைமை தேரரால் மத சடங்குள் நிகழத்தப்பட்ட பின்னர் பிரதம அதிதியால் தேரர்களுக்கு ‘பிரிகர’ வழங்கப்பட்டது.
இதனையடுத்து, வெந்தாமரை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
மத வழிபாடுகளுக்காக கதிர்காம ஆலய வளாகத்துக்கு சென்றிருந்த இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, கிரிவெஹெரவின் வென் தூபியை நிர்மாணிக்கும் பணிகளுக்கான நன்கொடையை வண. கோபாவாக்க தம்மிந்த தேரரிடம் வழங்கி வைத்தார்.




