தமிழ் மக்களின் பிள்ளைகளை, சிறுவர்களை கொன்று விட்டு இன்று சிறுவர் தினம் கொண்டாடுகின்றனர் இந்த கோட்டா அரசு என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சபையில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் சபையில் பேசிக்கொண்டு இருக்கும்போது, இடையிலே குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசுமன மற்றும் சந்தும பண்டாரா ஆகியோர் நாம் தமிழ் மக்களுக்கு எதிராக போர் செய்யவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராகவே நாம் போர் செய்தோம்.
ஆகவே, இவரின் பேச்சை கன்சாட்டில் இருந்து நீக்குமாறு தெரிவித்துள்ளனர்.


