தரமான உரங்களையே இறக்குமதி செய்வோம்! – அமைச்சர் மஹிந்தானந்த

நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் உரங்களை நாங்கள் இறக்குமதி செய்யமாட்டோம் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து நைற்றிஜன் உரம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்ட போதிலும் ஆய்வாளர்களின் கருத்துக்கு அமைய அதனை நிறுத்தியுள்ளோம்.

எனினும், நனோ நைற்றிஜன் உரம் இறக்குமதி செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சேதன உரத்தின் மாதிரிகளை பரிசோதனைக்கு உற்படுத்தி அவை நிராகரிக்கப்பட்டதன் பின்னரும் கப்பலில் ஏற்கனவே ஏற்றப்பட்ட உரங்கள் இப்போதும் இலங்கைக்கு வருகின்றது.

சீனாவில் இருந்து உரம் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் இலங்கையின் விளைச்சலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

அதேபோல், சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது நைற்றிஜன் உரமாகும். இது இலங்கையில் பயன்படுத்தும் உரத்துடன் கலப்பதற்கு பயன்படுத்துவது.

பெருபோகத்திற்கு தேவையான சகல உரமும் 10 ஆம் திகதிக்கு முன் இலங்கையை வந்தடையும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply