இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரினதும் அனைத்துவகையான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கமைய, காலாவதியாகும் விசாக்கள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை செல்லுபடியாகுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
2021 நவம்பர் 06 ஆம் திகதி வரையிலான விசா நீடிப்பு மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை காரணமாக நீடிக்கப்பட்டுள்ளமையால் அத்திகதிக்கு பின்னர் விசா இன்றி நாட்டில் தங்கியிருக்குமிடத்து ஏற்புடைய தண்டப் பணமான 500 அமெரிக்க டொலர்களை செலுத்த நேரிடும் என்பதை கட்டுப்பாட்டாளர் நாயகம் மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


