பண்டோரா ஆவணத்தில் தம் பெயர் உள்ளடக்கப்பட்டமை குறித்து விசாரணை செய்யுங்கள் -ஜனாதிபதிக்கு கடிதம்

பண்டோரா ஆவணத்தில் தம் பெயர் உள்ளடக்கப்பட்டமை குறித்து சுயாதீன விசாரணை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமரன் நடேசன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு ஒரு சுயாதீன புலனாய்வாளரை, ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியை நியமிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அவரும், அவர் மனைவியும் முற்றிலும் குற்றமற்றவர்கள் மற்றும் எந்த தவறும் செய்யாதவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது உடனடி விசாரணை நடத்துமாறு இலஞ்சம் அல்லது ஊழல் ஆணையாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply