அரசு நிறுவனங்களுக்கு பொதுமக்கள் வருவதைக் கட்டுப்படுத்துங்கள்: சுகாதாரத் துறை கோரிக்கை

தற்போதைய நாட்களில் பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக அதிகமான மக்கள் அரசு நிறுவனங்களுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , அதிகளவான மக்கள் ஒன்று கூடாத வகையில் அரச நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்லுமாறு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் மகேந்திர பாலசூரிய தனது கருத்துக்களை தெரிவித்தார்.

அத்தோடு வருவாய் உரிமங்கள், பல்வேறு அரசு கட்டணங்கள் போன்றவற்றுக்கு சில சலுகைக் காலத்தை வழங்குவதன் மூலம் அரச நிறுவனங்களுக்குள் நெரிசலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply