யாழ்.கீரிமலை கடலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில், தற்போது மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தட்டாதெருவை சேர்ந்த 19 வயதுடைய சூரியகாந்தன் சஞ்சிவன் எனும் இளைஞனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
கீரிமலை கடலில் இன்று புதன்கிழமை தனது நண்பர்கள் இருவருடன் நீராடிக்கொண்டு இருந்த வேளை காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கும் , கடற்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து , தற்போது குறித்த இளைஞன் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


