கொரோனா தடுப்பூசியின் வலுவைக் குறைக்கும் டெல்டா வைரஸ் பிறழ்வு!

கொரோனத் தடுப்பூசியின் வலுவை, டெல்டா வைரஸ் பிறழ்வு வெகுவாக குறைப்பதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் இரண்டு தடுப்பூசி மருந்தளவுகளையும் செலுத்தி பின்னரான, மூன்று மாதங்களில், டெல்டா வைரஸ் பிறழ்வு, அந்த தடுப்பூசியின் வலுவை குறைக்கிறது.

அதேவேளை, தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து, டெல்டா வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் குறைவாகக் காணப்படுகிறது.

குறித்த ஆய்வானது, ஆரம்பகட்டத்திலேயே உள்ளது. மேலும், உறுதிப்படுத்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply