கிளிநொச்சியில் 162 கிலோ மஞ்சள் மீட்பு!

கிளிநொச்சி, முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை பகுதியில் 162 கிலோ மஞ்சள் இன்று மீட்கப்பட்டுள்ளமையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நொச்சி முனை மற்றும் அன்பு புரத்தைச் சேர்ந்த 39, 22 வயதான இருவரையே பொலிஸார்; கைது செய்துள்ளனர்.

நொச்சிமுனை பகுதியில் கடற்கரையில் கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்ட நிலையில், நான்கு சாக்கு மூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சளை, இராணுவத்தினரும் முழங்காவில் பொலிஸாரும் மீட்டுள்ளனர்.

மேலும், மீட்கப்பட்ட மஞ்சள் மற்றும் சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply