இந்திய மீனவர்களது எல்லைதாண்டிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன துணை தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய, இலங்கை அரசாங்கங்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆகவே, எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தவுள்ளோம்.
இலங்கைக்கு, இந்திய வெளிவிவாகார செயலர் வருகைதந்தபோதும் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் மீனவர் பிரச்சினை தொடர்பில் அவருடன் பேசவில்லை. தமது பிரச்சினையை பேசுவதற்கு யாரும் இல்லை.
இந்நிலையிலேயே, நாம் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்யவுள்ளோம், நமது மீனவர்கள் பல கோடி சொத்துக்களை இதுவரை இழந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.


