நாட்டில் இனிவரும் நாட்களில் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துச் செல்வதால் இலங்கையில் விலைகளை கட்டுப்படுத்த இயலாது.
அதன்படி, வரும் நாட்களில் கண்டிப்பாக எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


