ஒற்றையாட்சி தீர்வை ஒருபோதும் ஏற்கமாட்டோம்! – கஜேந்திரகுமார்

ஒற்றையாட்சிக்குள் வருகின்ற அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ள நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடைய அரசாங்கம் தன்னிச்சையாக அரசியலமைப்பை நிறைவேற்ற முற்படுவதாக இதன்போது அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

Leave a Reply