நேற்று வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பொன்னாலை பகுதியில் கூரிய ஆயுதங்களை கையிருப்பில் வைத்திருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீடு ஒன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையால் முற்றுகையிடப்பட்டது.
மேலும் குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் மீட்க்கப்பட்டன.
இதனை அடுத்து குறித்த ஆயுதங்களை கையிருப்பில் வைத்திருந்த குற்றாச்சாட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட் நபர் மீட்கப்பட்ட ஆயுதங்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் பொன்னாலையில் பிறிதொரு பகுதியிலும் இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வாள் மீட்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


