சிறப்பு அமைச்சரவைக் கூட்டமானது, இன்று மாலை நடைபெற இருக்கும் நிலையில், அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை கேள்விக்குட்படுத்த 10 அரசு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வைத்தே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய கூட்டத்தில் பொருட்களின் விலை உயர்வு, உரப் பிரச்சினை, யுகதனவி மின்நிலையத்தை அமெரிக்காவிடம் ஒப்படைத்தல், திருகோணமலை எண்ணெய் தொட்டி விவகாரம் மற்றும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை நடைபெறவிருக்கும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக அரசாங்கத்திடம் கேள்வி எழுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டணிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


