யாழ்ப்பாணம், குருநகர் பிரதேசத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்தும் மூன்றாவது நாளாக மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி நுழைவதன் காரணமாக, அப் பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளமையால், அப் பிரச்சினைக்கு தீர்வை வழங்கக் கோரி மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில ஈடுபட்டுள்ளனர்.



