பனடோரா பத்திரிகையில் வெளிப்படுத்தப்பட்ட கருப்பு பணத்தை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் டொலர் பற்றாக்குறை இருக்கும் நேரத்தில் வெளிநாட்டு நாணயத்தை கொண்டு வருவதன் மூலம் டொலர் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பனடோரா பத்திரிகையில் வெளிப்படுத்தப்பட்ட டொலர்கள் தொகையை இலங்கைக்குத் திரும்பக் கொண்டுவந்தால் மிகவும் நல்லது என்றும் இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பனடோரா வெளிப்பாடுகள் பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்


